Subscribe:

Ads 468x60px

Saturday, 5 May 2012

மைக்ரோ சொப்டின் புது அறிமுகம். இனிமேல் அனைவரும் தமிழில் டைப் செய்யலாம்.

உங்களுக்கு தமிழ் டைப் தெரிய வில்லையா கவலை வேண்டாம். மைக்ரோ சாப்ட் நிறுவனமே நமக்கு இலவசமாக ஒரு அருமையான தமிழ் டூல் தந்து உள்ளது இதை பயன்படுத்தி xp,  vista,windows-7 போன்ற இயங்கு தளங்களிலும்,வலை தளங்களிலும் ,மைக்ரோ சாப்ட் வேர்டிலும்-ம் எளிதாக டைப் செய்யலாம் ,


இதைஎவ்வாறு எவ்வாறு இன்ஸ்டால் செய்து டைப் செய்வது என்பதை பார்ப்போமா .............
முதலில் இதை டவுன் லோட் செய்யுங்கள் பிறகு  winrar கொண்டு extract செய்து அதன் உள்ளே இருக்கும் அப்பிளிகேசன் பைலை டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் .முடிந்ததும் கீழே டாஸ்க் பாரில் வலது மூலையில் EN என்று வந்திருக்கும்  அதை கிளிக் செய்தால் வரும் option-ல் tamil டிக் செய்யவேண்டும் அவ்வளவு தான் இனி எங்கும் தமிழில் டைப் செய்யலாம் 
folder கூட rename செய்யலாம் .



முக்கிய குறிப்பு ; 
windows -xp பயன்படுத்துபவர்கள் கீழ் கண்ட வேலைகளை கண்டிப்பாக 
செய்தால்தான் டைப் செய்ய முடியும் விண்டோஸ் -7 க்கு இது செய்ய தேவை இல்லை  
windows-xp உபயோகிப்பவர்கள் கீழ்காணும் வழி முறைகளை பின்பற்றவும் 
.windows-xp os சி‌டிஇருக்க வேண்டும் .அது இருந்தால் cd drive -ல் செலுத்தி start-----control panel-----regional and language option சென்று 

பிறகு சில ஃபைல் கள் சி‌டி யில் இருந்து copy ஆகும் .பிறகு கீழுள்ள படத்தை பார்த்து செட்டிங் மாற்றவும்  1  2  3  வழிமுறைகள் 
அவ்வளவு தான் இனி windows xp உபயேகிப்பவர்களும் தமிழில் டைப் செய்யலாம் ......

Saturday, 3 March 2012

Huawei Dongle ஐ Unlock செய்வது எப்படி?

Dongle ஐ Unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.Dongle ஐ Unlock செய்வதற்கு கடைக்கு சென்றால்,எப்படியும் உங்களிடம் 250 ரூபாய் சேவை கட்டணமாக அரவிடுவார்கள்.அதை நான் இங்கு இலவசமாக சொல்லித்தருகிறேன்.

இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

Sunday, 29 January 2012

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

 சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

"gpedit.msc"

               

Monday, 9 January 2012

மனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப் பு தோல்தான்!

Wednesday, 28 December 2011

உங்கள் கணிணியில் நம்பிக்கையுடன் உலாவ AVG ஆண்டி வைரஸ் இலவச பதிப்பு 2012




AVG ஆண்டி-வைரஸ் இலவச பதிப்பு 2011 உங்கள் கணிணியை 
நம்பிக்கையாக உலாவ அனுமதிக்கிறது. AVG LinkScanner  நவீன பாதுகாப்புடன் கூடிய தேடுதல் முறைக்கு உட்பட்டது. AVG சமூக பாதுகாப்பு, சமூக நெட்வொர்க்குகளில் பாதுகாக்கப்பட்டது. ஓர் விரைவான இயக்கத்தில் AVG ஸ்மார்ட் ஸ்கேனிங் உங்களுக்கு குறைவான முன்னுரிமை முறையில்  அனுமதிக்கிறது: AVG சமூக பாதுகாப்பிற்கான வலைப்பின்னல் மற்றும் பாதுகாப்பிற்காக கிளவுட் தொழில்நுட்ப முறையில் சமீபத்திய அச்சுறுத்தல் தகவலை பெற முடிகிறது.




 

Friday, 9 December 2011

3] யூதர்கள்

அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது.

நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை மதித்தார்களே தவிர, மதகுருக்களைத்தான் வணக்கத்துக்குரியவர்களாக நினைத்தார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் தீர்ப்பு.

Wednesday, 30 November 2011

2] ஆப்ரஹாம் முதல்......

அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.

ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும்? தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை. யாசர் அராஃபத்தின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய இஸ்ரேலியத் தலைவர்கள் கூட, நவம்பர் 11, 2004 அன்று ரமல்லா நகரில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் குழுமிய கூட்டத்தின் கேவல் ஒலியில், சற்றே அசந்துதான் போனார்கள். எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள் அன்று அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள். இறுதிச் சடங்குகளைப் படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் கண்கலங்கி, ரகசியமாகத் துடைத்துக்கொண்டதைத் தொலைக்காட்சியில் நாம் பார்த்தோம்.

Monday, 28 November 2011

அருமையான Share This வசதியை உங்கள் ப்ளாகர் தளத்துக்கு சேர்த்திடுங்கள்


நம் பதிவை படித்த நண்பர்கள் அதனை அவர்கள் நண்பர்கள் உடன் ஷேர் செய்து கொள்ள விரும்பினால் மிக எளிதாக 300க்கும் மேற்பட்ட தளங்களில் செய்து கொள்வது எப்படி எனப் பார்க்கலாம். இது 3rd party டெம்ப்ளேட் பயன்படுத்துபவர்களுக்கு மிகப் பொருத்தமானது.


நாம் நம் வலைப்பூவை அழகுபடுத்த 3rd party டெம்ப்ளேட்களை பயன்படுத்துவோம்.இதனால் Share This என்ற  வசதி நமக்கு கிடைக்காது இதை இப்போது நாம் எளிதாக add செய்யலாம் வாருங்கள்.
முதலில் Addthis என்ற தளத்திற்கு செல்லவும், இப்போது  Join Now என்பதன் மூலம் அந்த தளத்தில் இணையவும்.  இப்போது கீழே மூன்று விதமான style ஆன share செய்யும் வசதி இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்யவும். 

இலவச PDF கன்வெர்ட்டர் மென்பொருள்

doPDF மென்பொருளானது தனிநபர் மற்றும் வர்த்தக பயன்பாடு இரண்டிற்க்கும் ஒரு இலவச PDF கன்வெர்ட்டராக உள்ளது. DoPDF பயன்படுத்தி உங்களுக்கு எந்த ஒரு "அச்சு" கட்டளையும் தேர்ந்தெடுத்து தேடக்கூடிய PDF கோப்புகளை உருவாக்கலாம். ஒரு கிளிக்கில் உங்களுக்கு PDF கோப்புகளை உங்கள் Microsoft Excel, Word அல்லது பதிவு ஆவணங்கள் அல்லது உங்கள் மின்னஞ்சல்களை மற்றும் பிடித்த வலைத்தளங்களை PDF கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.

Sunday, 27 November 2011

சிஸ்டம் டிப்ஸ்

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும். இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம்களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

Friday, 18 November 2011

இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய

சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம்.
புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம்.
இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது.
இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.
ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
இணையதள முகவரி

Monday, 14 November 2011

பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)


நமது ப்ளாக்கர்  தளத்தின் கீழ் Older Posts என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிகம் பேர் அதனை க்ளிக் செய்வதில்லை. அதற்கு பதிலாக பக்கஎண்களை (Page Numbers) சேர்த்தால் அதனை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ப்ளாக் அழகாகவும் காட்சி அளிக்கும். அதனை எப்படி சேர்ப்பது  என்று பார்ப்போம். 

1. முதலில் Blogger Dashboard =>Settings => Formatting செல்லுங்கள்.


Tuesday, 8 November 2011

ஹார்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

Thursday, 3 November 2011

உங்கள் பதிவுகளுக்கு Related Post Link add செய்திடுங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது பிளாக்கர் related posts widgets   இல்லை இல்லை link என்று கூற வேண்டும். படங்கள் எதுவும் இல்லாத related posts link . உங்கள் post ன் கீழே இது தோன்றும் படி நீங்கள் இதனை add செய்து கொள்ளலாம். 



இப்போது Codings  
முதலில் உங்கள் பிளாக்கர் இல் DashBoard---> Design---> Edit HTML 
இதில் Expand Widgets Templates ஐ கிளிக் செய்யவும்.
அடுத்ததாக இந்த வரியை கண்டு பிடிக்கவும், 

Saturday, 29 October 2011

பிளாக் தயாரிக்க உதவி வேண்டுமா!

கம்ப்யூட்டரைப் பயன்படுத்த பழகிக் கொண்ட அனைவரும், இன்டர்நெட் வழியே தங்களுக்கென நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அடுத்ததாகத் தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை
உலகிற்கு எடுத்துச் சொல்ல Blog எனப்படும் தனி வலைமனைகளை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு உதவிடத் தற்போது இணையத்தில் பல தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வலைமனைகளை அமைப்பது மட்டுமின்றி, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கவும் பல தளங்களில் தகவல்கள் கிடைக்கின்றன. 
இந்த வலைமனைகளை உருவாக்குவதில், சில குழு நண்பர்களிடம் ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. எந்த விஷயங் களைச் சேர்த்து வடிவமைத்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி வழிகாட்டவும் பல தளங்கள் கிடைக்கின்றன. 
மேலே குறிப்பிடப்படும் அனைத்து உதவி களையும் தரும் ஓர் தளத்தினை அண்மையில் காண நேர்ந்தது. அதன் முகவரி http://www.allblogtools.com/. வலைமனை தயாரிப்பிற்கு இதில் கிடைக்கின்ற டூல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 

Saturday, 22 October 2011

மிக சிறந்த பத்து மென்பொருள்கள்


சென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/


2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்: http://www.foxitsoftware.com/pdf/reader/


3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im


4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com


5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்: http://www.mozilla.com/enUS/firefox/personal.html


6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/


7. ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள் ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/


8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம். இன்றும் வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்: http://www.skype. com/


9. க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer):  டாகுமென்ட்களை பி.டி.எப். பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்: http://www.cutepdf.com/


10. கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது? கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்: http://keeppass.info/

Wednesday, 19 October 2011

மொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்! கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!

  • சார்… உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.

  • தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.

  • அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.

Saturday, 13 August 2011

விண்டோஸ் 8 இயங்கு தளம் முழு பதிப்பு இலவச தரவிறக்கம்


What is Windows 8 xTreme ™?


Windows 8 xTreme ™ its a System based on Windows 7 Final:It is originally a tweaked version of windows 7
Windows 8 xTreme ™ doesn't have any components removed from Original Windows 7 Image so you wont lose any compatibly with software, hardware or miss any stuff at all.

Windows 8 xTreme ™ its a Clean Windows 7 Image with a compilation of the best tweaks and a new integrated look ... keeping all new features like superbar, etc ...
Windows 8 xTreme ™ has been tested in a real machine with a compilation of over 200 softwares ...
All default applications are silently installed before StartUp ...




Tweaks:


UAC Disabled
Take Ownership
Show File Extensions
Automatic Defragmentation with Diskeeper
New Cmd File to Right Click
Enabled Search System Folders in Search
ClearType
Windows Will Tell You Exactly What it is Doing When it is Shutting Down or is Booting
Increase Network Throughput
... many tweaks for IE8
... many more tweaks for W7 ...

Monday, 1 August 2011

கணிணியின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை சரிபடுத்தும் டியூன்அப் உட்டலிட்டிஸ்2011 பதிப்பு10.0.2011.65 அசல் மென்பொருளை இலவசமாக பதிவிறக்கலாம்.

  • டியூன்அப் உட்டலிட்டிஸ் மிக முக்கியமான உட்கட்டமைப்பை  சரிப்படுத்தும் நடவடிக்கைகளை அணுக கொடுக்கிறது. 


  • டியூன்அப் உட்டலிட்டிஸ் அமைப்பு மிகவும் அனுகூலமானதாக இருக்கிறது 


  • டியூன்அப் உட்டலிட்டிஸ் பிசி பிரேக்குகள் அழித்து அதிகபட்ச வேகத்தில் கணினியில் உலாவலமுடிகிறது 

  • உங்கள் கணினி இன்னும் வேகமாக இயக்க எரிச்சலூட்டும் தரவு குப்பை கண்டுபிடித்து நீக்குகிறது. 


  • விண்டோஸ் பிரச்சினைகளை தீர்த்தல்.


  • டியூன்அப் உட்டலிட்டிஸ் 32 தேர்வுமுறை கருவிகள் வழங்குகிறது நேரடியாக அணுகல் கொண்டிருக்கின்றன. 



டவுன்லோட் செய்யும் முறை:



  • டொரண்ட் தறவிரக்க மென்பொருளை டவுன்லோடு செய்யவும்.


  • டொரண்ட் தறவிரக்க மென்பொருள் உதவியுடன் டியூன்அப் உட்டலிட்டிஸ்2011 பதிப்பு10.0.2011.65 இலவசமாக டவுன்லோடு செய்யவும்.

டொரண்ட் தறவிரக்க மென்பொருளை டவுன்லோடு செய்ய