Subscribe:

Ads 468x60px

Sunday, 27 November 2011

சிஸ்டம் டிப்ஸ்

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும். இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம்களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

Friday, 18 November 2011

இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய

சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம்.
புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம்.
இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது.
இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.
ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
இணையதள முகவரி

Monday, 14 November 2011

பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)


நமது ப்ளாக்கர்  தளத்தின் கீழ் Older Posts என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிகம் பேர் அதனை க்ளிக் செய்வதில்லை. அதற்கு பதிலாக பக்கஎண்களை (Page Numbers) சேர்த்தால் அதனை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ப்ளாக் அழகாகவும் காட்சி அளிக்கும். அதனை எப்படி சேர்ப்பது  என்று பார்ப்போம். 

1. முதலில் Blogger Dashboard =>Settings => Formatting செல்லுங்கள்.


Tuesday, 8 November 2011

ஹார்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

Thursday, 3 November 2011

உங்கள் பதிவுகளுக்கு Related Post Link add செய்திடுங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது பிளாக்கர் related posts widgets   இல்லை இல்லை link என்று கூற வேண்டும். படங்கள் எதுவும் இல்லாத related posts link . உங்கள் post ன் கீழே இது தோன்றும் படி நீங்கள் இதனை add செய்து கொள்ளலாம். 



இப்போது Codings  
முதலில் உங்கள் பிளாக்கர் இல் DashBoard---> Design---> Edit HTML 
இதில் Expand Widgets Templates ஐ கிளிக் செய்யவும்.
அடுத்ததாக இந்த வரியை கண்டு பிடிக்கவும்,