Subscribe:

Ads 468x60px

Wednesday 30 November 2011

2] ஆப்ரஹாம் முதல்......

அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.

ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும்? தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்

ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை. யாசர் அராஃபத்தின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய இஸ்ரேலியத் தலைவர்கள் கூட, நவம்பர் 11, 2004 அன்று ரமல்லா நகரில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் குழுமிய கூட்டத்தின் கேவல் ஒலியில், சற்றே அசந்துதான் போனார்கள். எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள் அன்று அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள். இறுதிச் சடங்குகளைப் படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் கண்கலங்கி, ரகசியமாகத் துடைத்துக்கொண்டதைத் தொலைக்காட்சியில் நாம் பார்த்தோம்.

Monday 28 November 2011

அருமையான Share This வசதியை உங்கள் ப்ளாகர் தளத்துக்கு சேர்த்திடுங்கள்


நம் பதிவை படித்த நண்பர்கள் அதனை அவர்கள் நண்பர்கள் உடன் ஷேர் செய்து கொள்ள விரும்பினால் மிக எளிதாக 300க்கும் மேற்பட்ட தளங்களில் செய்து கொள்வது எப்படி எனப் பார்க்கலாம். இது 3rd party டெம்ப்ளேட் பயன்படுத்துபவர்களுக்கு மிகப் பொருத்தமானது.


நாம் நம் வலைப்பூவை அழகுபடுத்த 3rd party டெம்ப்ளேட்களை பயன்படுத்துவோம்.இதனால் Share This என்ற  வசதி நமக்கு கிடைக்காது இதை இப்போது நாம் எளிதாக add செய்யலாம் வாருங்கள்.
முதலில் Addthis என்ற தளத்திற்கு செல்லவும், இப்போது  Join Now என்பதன் மூலம் அந்த தளத்தில் இணையவும்.  இப்போது கீழே மூன்று விதமான style ஆன share செய்யும் வசதி இருக்கும் அதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்யவும். 

இலவச PDF கன்வெர்ட்டர் மென்பொருள்

doPDF மென்பொருளானது தனிநபர் மற்றும் வர்த்தக பயன்பாடு இரண்டிற்க்கும் ஒரு இலவச PDF கன்வெர்ட்டராக உள்ளது. DoPDF பயன்படுத்தி உங்களுக்கு எந்த ஒரு "அச்சு" கட்டளையும் தேர்ந்தெடுத்து தேடக்கூடிய PDF கோப்புகளை உருவாக்கலாம். ஒரு கிளிக்கில் உங்களுக்கு PDF கோப்புகளை உங்கள் Microsoft Excel, Word அல்லது பதிவு ஆவணங்கள் அல்லது உங்கள் மின்னஞ்சல்களை மற்றும் பிடித்த வலைத்தளங்களை PDF கோப்புகளாக மாற்றியமைக்க முடியும்.

Sunday 27 November 2011

சிஸ்டம் டிப்ஸ்

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்திட மவுஸ் மூலம் ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திடலாம். மொத்தமாக மினிமைஸ் செய்திட விண்டோஸ் கீ + எம் (Windows key+M) கீகளை அழுத்தவும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும் மினிமைஸ் செய்யப்படும். இவை அனைத்தையும் மீண்டும் பெற விண்டோஸ் கீ + ஷிப்ட் + எம் கீகளை (Windows key+Shift+M) அழுத்தவும். இந்த புரோகிராம்களை ஒவ்வொன்றாக மினிமைஸ் செய்திட Alt+Space+N கீகளை அழுத்தவும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக மீண்டும் மேக்ஸிமைஸ் செய்திட Alt+Space+X கீகளை அழுத்தவும்.

Friday 18 November 2011

இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய

சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும்
அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம்.
புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம்.
இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது.
இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.
ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.
இணையதள முகவரி

Monday 14 November 2011

பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)


நமது ப்ளாக்கர்  தளத்தின் கீழ் Older Posts என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிகம் பேர் அதனை க்ளிக் செய்வதில்லை. அதற்கு பதிலாக பக்கஎண்களை (Page Numbers) சேர்த்தால் அதனை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ப்ளாக் அழகாகவும் காட்சி அளிக்கும். அதனை எப்படி சேர்ப்பது  என்று பார்ப்போம். 

1. முதலில் Blogger Dashboard =>Settings => Formatting செல்லுங்கள்.


Tuesday 8 November 2011

ஹார்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

Thursday 3 November 2011

உங்கள் பதிவுகளுக்கு Related Post Link add செய்திடுங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது பிளாக்கர் related posts widgets   இல்லை இல்லை link என்று கூற வேண்டும். படங்கள் எதுவும் இல்லாத related posts link . உங்கள் post ன் கீழே இது தோன்றும் படி நீங்கள் இதனை add செய்து கொள்ளலாம். 



இப்போது Codings  
முதலில் உங்கள் பிளாக்கர் இல் DashBoard---> Design---> Edit HTML 
இதில் Expand Widgets Templates ஐ கிளிக் செய்யவும்.
அடுத்ததாக இந்த வரியை கண்டு பிடிக்கவும்,