Subscribe:

Ads 468x60px

Wednesday, 20 July 2011

எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலவசமாக வேகமாக அனுப்ப எளிய வழி.

கணினியில் உள்ள கோப்புகளை இணையம் வழியாக இலவசமாக
அனுப்புவதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் எந்த விளம்பரமும்
எந்த இடைஞ்சலும் இல்லாமல் எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்புவதற்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கோப்புகளை மற்றவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நாம்
உடனடியாக செல்லும் இணையதளம் என்றால் அது Rapidshare,
megaupload இன்னும் பல தளங்கள் இருக்கிறது இந்தத்தளங்களில்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் நீங்கள் காசு
கொடுத்த பயனாளராக இருந்தால் வேகமாகவும் இல்லை இலவசமாக
என்றால் வேகம் குறைவாகவும் தான் தரவிரக்கம் ஆகும் இது
மட்டுமின்றி ஆங்காங்கே விளம்பரங்கள் வந்து நம்மை தொல்லை
கொடுப்பதும் உண்டு. இப்படி அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி
எளிதாக கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் தரவிரக்கவும் நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://ge.tt
இத்தளம் பார்ப்பதற்கு மட்டுமல்ல இதன் சேவையும் எளிதாகவும்
அனைவரும் பயன்படுத்தும் வண்ணமும் இருக்கிறது.இத்தளத்திற்கு
இடது பக்கம் இருக்கும் Read more என்பதை சொடுக்கி நாம் பயனாளர்
பெயர் மற்றும் கடவுச்சொல் என்ற இரண்டையும் கொடுத்து ஒரு புதிய
பயனாளர் கணக்கு உருவாக்கி கொள்ளலாம். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி Select Files என்ற பொத்தானை சொடுக்கி நாம் பதிவேற்றம்
செய்யவேண்டியது தான். பதிவேற்றிய பின் கிடைக்கும் இணையதள
முகவரியை சேமித்து யாருக்கு இந்த கோப்பை அனுப்ப வேண்டுமோ
அவருக்கு இந்த முகவரியை அனுப்பினால் போதும் அவர் இந்த
முகவரியை சொடுக்கி எளிதாக தரவிரக்கலாம். கண்டிப்பாக இணையம்
பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment