Subscribe:

Ads 468x60px

Tuesday, 5 July 2011

பேருந்து , இரயில் ,விமானம் மூலம் நாம் செல்லும் இடத்துக்கு மேப், பயண நேரம் , செலவு கொடுக்கும் பயனுள்ளதளம்.

உலகின் எந்த நாட்டில் இருந்தும் உலகின் எந்த பகுதிக்கும் பேருந்து
முதல் இரயில் , விமானம் மூலம் செல்ல நமக்கு மேப் மட்டும்
இல்லாமல் பயண நேரம் , பயணச்செலவு அத்தனையும் கொடுக்கிறது
ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

விடுமுறை தொடங்கியாச்சு வெளிமாநிலம் முதல் வெளிநாடு வரை
செல்ல விரும்பும் அனைவருக்கும் பயணத் தகவல்களையும் அதற்கு
ஆகும் செலவையும் நேரத்தையும் துல்லியமாக கொடுத்து நமக்கு
ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.rome2rio.com
இத்தளத்திற்கு சென்று நாம் உலக அளவில் எந்த நாட்டில் இருந்தும்
எந்த நாட்டிற்கும், ஒரே நாட்டில் இருந்து வெவ்வெறு மாநிலங்களுக்கும்
செல்வதற்கான மேப் பேருந்தில் செல்வது முதல் இரயில் விமானம்
என அத்தனையும் பட்டியலிட்டு காட்டுகிறது இதில் வலது பக்கம்
இருப்பதில் பேருந்து , இரயில் , விமானம் என எதில் நாம் செல்ல
வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தால் போதும், எத்தனை கீ.மீ என்பது
முதல் பயணச்செலவு வரை அத்தனையும் காட்டும் கூடவே வலது
பக்கம் கூகிள் மேப் உதவியுடன் மேப் காட்டப்படும். கண்டிப்பாக
இந்தப்பதிவு சுற்றுலா செல்பவர்களுக்கும் வேலை நிமிர்த்தமாக
வெளிநாடு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment