Subscribe:

Ads 468x60px

Saturday, 9 July 2011

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய எளிய மென்பொருள்

விண்டோஸ் ட்ரைவர்களை அப்டேட் செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருள்கள் உள்ளன.
Smart Driver Updater என்ற மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் இணையத்தின்
உதவியுடன் ட்ரைவர்களை அப்டேட் மற்றும் புதியதாகவும் நிறுவிக் கொள்ள முடியும்.
மேலும் இந்த Smart Driver Updater உதவியுடன் ட்ரைவர்களை பக் அப் மீண்டும் கணணியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி கணணியில் உள்ள ட்ரைவர்களை ஸ்கேன் செய்யவும். தற்போது விடுபட்ட ட்ரைவர்களை பட்டியலிடும்.
பின் வேண்டிய ட்ரைவர்களை இணையத்தின் உதவியுடன் உங்கள் கணணியில் பதிவேற்றம் செய்து கொள்ளவும். வேண்டுமெனில் ட்ரைவர்களை பக் அப் செய்து கொள்ளவும் முடியும்.
இந்த மென்பொருள் மூலம் பக் அப் செய்து மீண்டும் ட்ரைவர்களை எளிமையாக நிறுவிக் கொள்ள முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.

No comments:

Post a Comment