Subscribe:

Ads 468x60px

Tuesday, 26 July 2011

ஐபோன், ஆண்டிராய்டு போனில் வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றும் Yap.

ஐபோன் மற்றும் ஆண்டிராய்டு போன் தற்போது அனைத்து மக்களிடமும் பிரபலமாகி வருகிறது. சேவைகளுக்காக பலவிதமான அப்ளிகேசன்கள் நாளும் வந்த வண்ணம் உள்ளது இதில் வாய்ஸ்மெயிலை (Voice Mail ) -ஐ படிக்க்கக்கூடிய ( Readable Text ) ஆக மாற்றிக்கொடுக்க YAP Voicemail என்ற அப்ளிகேசன் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
                                                                        படம் 1
தட்டச்சு செய்ய நேரம் இல்லாத நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்தியை வாய்ஸ்மெயில் ஆக மாற்றி அனுப்புவோம் , இப்படி நாம் அனுப்பும் மற்றும் பெறும் வாய்ஸ்மெயில் செய்தியை படிக்கக்கூடிய செய்தியாக மாற்றத் தான் இந்த YAP அப்ளிகேசன் உதவுகிறது.
YAP Voice mail தறவிரக்க முகவரி :

                                                                          படம் 2
இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி ஐபோனில் வேண்டும் என்றால் Available on the App Store என்பதிலும் ஆண்டிராய்டு என்பதில் வேண்டும் என்றால் Available on the Android Market என்பதையும் சொடுக்கி Yap Voicemail நிறுவலாம். இனி உங்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற கடினம் இல்லாமல் நமக்கு வரும் ஆடியோ செய்தியை அப்படியே டெக்ஸ்ட் செய்தியாக இந்த அப்ளிகேசன் மாற்றிக் கொடுக்கிறது. வாய்ஸ்மெயிலை படிக்கக்கூடிய செய்தியாக மாற்ற விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


No comments:

Post a Comment