இன்றைய பதிவு registry data வில் உள்ள தேவையற்ற data களை அழித்து மெமறியின் அளவை கூட்டுவதன் ஊடாக கணினியின் வேகத்த்தை அதிகரிக்க உதவும் மென்பொருள் ஒன்றைப்பற்றியே.
இம்மென்பொருள் பெயர் Registry Trash Keys Finder 3.9.0. சுருக்கமாக RTKF அழைக்கப்படுகிறது. எனைப்போன்ற பதிவர்கள் பல மென்பொருள்களை கணினியில் நிறுவி பரீட்சாத்தமாக இயக்கி பார்ப்போம். பின் அதை நீக்குவோம். உண்மையில் அவ்வாறு நீக்கும்போது parent programs மட்டுமெ நீக்கப்படுகிறது. அதன் "orphaned" entries , "rubbish" ஆகியவை நாம் நிறுவிய "trial" வகை மென்பொருட்கள் உட்பட அனத்துவகை மென்பொருட்களினாலுமே நமது மெமறியில் குப்பைகளாக தேங்கி அம்மெமறியின் இடத்தை பிப்பது மட்டுமல்லாமல் கணனியின் வேகத்தையும் கணிசமான அளவில் முடக்கி வைக்கின்றன.
இவற்றை முழுமையாக கணினியைய விட்டு துரத்த வின்டோஸ் கணினிகளில் போதிய உபாயங்கள் தரப்படவும் இல்லை. எனவே நாம் இவற்றை நீக்க வேறு மென்பொருட்களின் உதவியை நாடவேண்டும். அவ்வாறு நீங்கள் நாடும் மென்பொருளும் "trial" ஆக அல்லது கட்டண மென்பொருளாக இருந்துவிட்டால் உங்கள் நிலை என்னவாகும்?
கவலையை விடுங்கள். உங்கள் தேவையை நிறைவேற்ற நான் ஓரு இலவச மென்பொருளுடன் வந்துள்ளேன். மிகச்சிறிய 470K அளவே கொண்ட இம்மென்பொருள் Windows ன் speed and reliability ஐ அதிகரிக்கும் பணியை உண்மையாகவே செய்கிறது.Windows கணினிகளில் நாம் நிறுவிய மென்பொருள்களை நீக்கும்போது அங்கு improper uninstallation தான் நடைபெறுகிறது.இதுவே இவ்வகை கணினியில் major problem ஆகவும் உள்ளது.இங்கு நாம் நீக்கும் மென்பொருட்கள் "hidden" registry entries உருவாக்கி வைத்துவிடும். அவற்றை எம்மால் சாதாரண முறையில் அழித்து விட முடியாது. எனவே அவற்றை முறையாக கணினியில் இருந்து அகற்றி மெமறியன் அளவை கூட்டி கணினியின் வேகத்தை அதிகரிக்க இம்மென்பொருளை நிறுவி பயன்படுத்தி பாருங்கள்.
தரவிறக்க இங்கே செல்லுங்கள்.உங்களால் நேரடியாக தரவிறக்க முடியாவிட்டால் கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து தரவிறக்க இணைப்பை பெற்றுக்கொள்ளுங்கள். அதிலிருந்து தரிவிறக்கம் செய்யலாம்.
அல்லது இந்த இணைப்புக்கு செல்லுங்கள் உடனடியாக தரவிறக்கலாம்.
No comments:
Post a Comment